தமிழகத்தில், காவல் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் எந்த தனியார் பெயர்களும் இடம் பெறக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் . அதில், சில போலீஸ் நிலையத்தின் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இவை மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. அதனால் விளம்பரத்துடன் கூடிய போலீஸ் நிலையத்தின் பெயர் பலகைகளை உடனே அகற்றி விட்டு, போலீஸ் நிலைய பெயர் மட்டுமே அமைந்திருக்கும் புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதற்கு காவல் நிலைய முன்பணத்தை செலவிடலாம் எனவும் கூறியுள்ளார் .