wild card ல் வெற்றிபெற்று சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளவர்களின் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் சிங்கர். இந்நிகழ்ச்சியில் தற்போது பெரியவர்களுக்கான 8வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அண்மையில் wild card சுற்று நடந்துள்ளது.
இந்நிலையில் இந்த wild card ன் மூலம் யார் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய இருவரும் wild card ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.