Categories
மாநில செய்திகள்

மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்வு…. அரசாணை பற்றி தலைமைச் செயலாளர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் அரசு பணியில் பணிபுரியும் மகளிர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுப்பு தொடக்கத்தில் 1980ஆம் ஆண்டு 90 நாட்களாக இருந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 6 மாத காலமாக உயர்த்தினார். அதன்பின்னர் பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பேறுகால விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக உயர்த்தப்பட்டது . அதற்கான அரசானையும் வெளியிடப்பட்டுள்ளது .

இதையெடுத்து தலைமைச் செயலாளர் இறையன்பு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டதை பற்றி விளக்கமளித்துள்ளார். அதில், பேறுகால விடுப்பு 9 மாதம் முடிந்த பின்பும் பணிக்கு வராமல் உள்ளவர்களுக்கு அது பணி நாளாகவே அறிவிக்கப்படும் என்றும், தற்போது 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களுக்கும் 12 மாத பேறுகால விடுப்பாக  அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |