இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் புதிதாக இயக்கும் படத்தில் நடிகர் அஜ்மல் அமீர் இணைந்துள்ளார் .
தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான அஞ்சாதே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அஜ்மல் அமீர். இதை தொடர்ந்து இவர் கோ, சித்திரம் பேசுதடி-2, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தில் அஜ்மல் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோல்ட்’ படத்தில் அஜ்மல் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அஜ்மல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.