Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்…. வெளிநாடு செல்லும் இளைஞர்கள்…. தகவல் தெரிவித்த தலீபான்கள்….!!

வேலையின்மை காரணமாக இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடி செல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

ஆப்கானிஸ்தானை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நீடித்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. மேலும்  தற்போது தான் ஆப்கான் பழைய நிலைமைக்கு திரும்புகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதால் இளைஞர்கள் பல்வேறு நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக காபூல் நகர மக்கள் மிகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இளைஞர்கள் வேலைக்காக செல்ல விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த தலீபான்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “வேலையில்லா திண்டாட்டமானது வெகு சீக்கிரமாக சரி செய்யப்படும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |