ஒவ்வொரு ஆண்டும் தேர்தலில் தொண்டர்கள் எவ்வளவு உற்சாகமாக இருப்பார்களோ அதுபோல அறிஞர் அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்தநாள், திமுக தொடங்கப்பட்ட நாள் போன்றவற்றை இணைந்து முப்பெரும் விழாவாக திமுக தொண்டர்கள் வெகுவிமர்சியாக கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவானது கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக காணொளி காட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு பதவி ஏற்ற திமுகவிற்கு இந்த வருடம் இந்த முப்பெரும் விழா மிகவும் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்ற இவ்விழாவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்டு காணொளி மூலம் கண்டு ரசித்தார்.
இந்த விழாவினை கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொரோனா எச்சரிக்கையுடன் தனிமனித இடைவெளியுடன் இருக்க வேண்டும் எனவும், பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் எனவும் திட்டமிட்டு பல்வேறு மேசைகளை கொண்டு, மேசைக்கு ஒருவர் என அமைத்து விழாவினை ஏற்பாடு செய்தார். அதில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி விழாவினை அமர்க்களமாக கொண்டாடியுள்ளனர்.
மேலும் கட்சியில் உள்ள தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.10000 என 270 பேருக்கு 27 இலட்சத்தை செந்தில் பாலாஜி அவர்கள் வழங்கியுள்ளார். இந்த தகவலை அறிந்த முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செந்தில் பாலாஜிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதனால் செந்தில் பாலாஜி மற்றும் கரூரில் உள்ள மற்ற தொண்டர்கள் மிகவும் சந்தோசமாக உள்ளனர்.