Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம்.. ஐகோர்ட் அறிவுறுத்தல்!!

புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது தான் மாணவர்களின் நலனுக்கு சிறந்தது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் கல்வியை பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள முறையை தான் பின்பற்றுகிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தையே சார்ந்துள்ளது. எனவே  புதுச்சேரி மாநிலத்திற்கு தனியாக கல்வி வாரியம் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்..

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைப்பது தான் மாணவர்களின் நலனுக்கு சிறந்தது. இதில் அரசு தான் முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் நலன்கருதி தனி கல்வி வாரியம் அமைப்பது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Categories

Tech |