பிரான்ஸ் தனது தூதர்களை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டது.
ஆஸ்திரேலியா நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவதற்காக பிரான்ஸ் அரசுடன் 90 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா பிரதமரான ஸ்காட் மாரிசன் பிரான்ஸ் அதிபரான இமானுவேல் மேக்ரானுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த பிரான்ஸ் அதிபர் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்காக அமெரிக்காவை அழைத்து கேட்டுள்ள்ளார். இதன் பிறகு அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா, பிரித்தானியாவுடன் நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் புதிய ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
அதுவும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் ஆஸ்திரேலியா கைகோர்த்துள்ளது முதுகில் குத்தும் செயலாகும் என்று பிரான்ஸ் அதிபர் கூறியுள்ளார். மேலும் இப்படி ஒரு சம்பவத்தை ஏற்க முடியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களின் தூதர்களை பிரான்ஸ் திரும்ப அழைத்துக் கொண்டது. அதிலும் பிரான்ஸ்க்கு பிரித்தானியாவுடன் ஏற்கனவே பல இன்னல்கள் உள்ளது. பொதுவாக பிரித்தானியா ஒரு சந்தர்ப்பவாதி என்பதால் அந்நாட்டு தூதருடன் பேச வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக வாஷிங்டன் மற்றும் பால்ட்டிமோர் ஆகிய இடங்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் நட்பிற்கு அடையாளமாக நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்த முடிவினால் நிகழ்ச்சியை பிரான்ஸ் ரத்து செய்துள்ளது. அதிலும் இந்த சம்பவமானது இரு நாடுகளுக்கு இடையேயான சிறு மோதல் மாதிரி தெரியப்பட்டாலும் இதற்கு பின்னர் பெரிய சர்வதேச அரசியல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது என்னவென்றால் சீனா, இந்தோ பசிபிக் பகுதியில் தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வருகிறது.
இதுமட்டுமின்றி இந்தியா படைகளுடனும் மோதுதல், தைவானில் வான் வெளியில் விமானங்களை அனுப்புதல் போன்ற செயல்களை செய்து தங்களை பலம் வாய்ந்தவர்களாக காட்டி கொள்கின்றனர். இது போன்ற செயல்களுக்கு எதிராக மேற்கு நாடுகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து நிற்கிறோம் என்பதனை காட்டுவதற்காகவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்ஸின் டீசல் நீர்மூழ்கி கப்பலை விட ஆஸ்திரேலியாவில் கட்டப்படவுள்ள நீர்மூழ்கி கப்பல்கள் மிகவும் விரைவாக சத்தம் எழுப்பாமல் செல்லக்கூடியவை. அதிலும் அடிக்கடி எரிபொருள் நிரப்பும் தேவை இல்லை. இது மாதிரியான பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.