Categories
தேசிய செய்திகள்

வீடு கட்ட ரூ.35,000…. முதலமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு…!!!

ஆந்திரப் பிரதேசத்தில் சுய உதவி குழுக்களை சேர்ந்த வீட்டு திட்ட பயனாளிகளுக்கு மூன்று சதவிகித வட்டியில் கூடுதலாக 35 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்க ஆந்திர மாநில அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்றது முதலே தொலைநோக்கு பார்வை கொண்ட பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் .

இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஆந்திராவில் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் 1983 மற்றும் 2011 ஆகஸ்ட் 15 வரை ஆந்திர வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு கூடுதலாக 35 ஆயிரம் ரூபாய் வழங்க அம்மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் சுமார் 46 லட்சத்து 61 ஆயிரத்து 737 பேர் பயனடைவார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |