கால்பந்து பயற்சியாளருக்கு காலில் கொடிய விஷம் கொண்ட சிலந்தி கடித்து உடலில் வெள்ளை எண்ணிக்கை குறைந்துள்ளது.
பிரித்தானியாவில் Norfolkகைச் சேர்ந்த 31 வயதான கால்பந்து பயிற்சியாளர் லீவிஸ் ஆல்ப். இவர் தனது காலில் கொப்பளம் ஒன்று உள்ளதை கண்டுள்ளார். மேலும் இது வெயிலில் விளையாடியது காரணமாக தான் ஏற்பட்டுள்ளது என்று நினைத்துக் கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சில நாட்களில் அவருக்கு அதீத காய்ச்சலும் அதனை தொடர்ந்து கடுமையான உடல் வலியும் ஏற்பட்டு உள்ளது. மேலும் தனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதோ என்று நினைத்து பல பரிசோதனைகளை செய்துள்ளார்.
அந்த பரிசோதனையில் அவருக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று காத்திருந்தது. அதில் false widow என்னும் கொடிய விஷம் கொண்ட சிலந்தி அவரின் கால்களை கடித்ததால் மிகப்பெரிய கொப்பளம் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. இதன் காரணமாக தான் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தற்பொழுது தான் மீண்டுள்ளார். மேலும் வருங்காலத்தில் இது போன்று சிலந்திகள் கடிக்காமல் இருப்பதற்கு முழங்கால் வரை சாக்ஸ் அணிய இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து லீவிஸ் கூறியதில் ” ஒரு கொடிய விஷம் கொண்ட சிலந்தி கடித்ததை நினைத்து பார்க்கவே எனக்கு அச்சமாக உள்ளது. இதனால் என் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நான் கற்பனை செய்ததை விட மிகவும் என்னை பாதித்தது” என்று கூறியுள்ளார்.