அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக நடத்திய சோதனையில் ஐந்து கிலோ தங்க நகைகள், வைர நகைகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீரமணிக்கு சொந்தமான முப்பத்தி ஐந்து இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.சி வீரமணி, தன்னுடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதற்கு திமுக அரசின் காழ்புணர்ச்சி தான் காரணம் என்றும், இதை நீதிமன்றம் வரை சென்று சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஜோலார்பேட்டையில் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய கே.சி வீரமணியுடன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி சண்முகம், கருப்பண்ணன் ஆகியோர் சந்தித்து பேசியுள்ளனர்.