Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் எரிக்கபட்ட மொபட்…. காவல்துறை அதிகாரிக்கு கத்திக்குத்து…. திருச்சியில் பரபரப்பு….!!

தவறை தட்டிக்கேட்ட காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழசவேரியார்புரம் பகுதியில் ஜூலியட் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனது மொபட்டை குடிபோதையில் நடுரோட்டில் போட்டு தீ வைத்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஜூலியட் சாந்தகுமாரை தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது போதையில் இருந்த ஜூலியட் சாந்தகுமார் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசியதோடு கையில் வைத்திருந்த கத்தியால் தன்னை தானே குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜூலியட் சாந்தகுமாரை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ஜூலியட் சாந்தகுமார் காவல்துறை அதிகாரியான கார்த்திக்கை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து பிற காவல்துறையினர் ஜூலியட் சாந்தகுமாரை பிடித்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் காவல்துறை அதிகாரி கார்த்திக்கை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று காவல்துறை அதிகாரி கார்த்திக்கை நலம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளார்.

Categories

Tech |