Categories
தேசிய செய்திகள்

இது தான் அதிர்ஷ்டம்… நூலிழையில் உயிர் தப்பிய நபர்… வைரல் வீடியோ…!!!

குஜராத் மாநிலத்தில் எதிர்பாராத விபத்தில் டிராக்டரின் பின் சக்கரத்தில் சிக்கிய நபர் தலைக்கவசம் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

தர்மம் தலைகாக்கும் என்பதைவிட தலைக்கவசம் உயிர்காக்கும் என்ற நிதர்சனமான உண்மை  குஜராத் மாநிலத்தில் நிரூபணமாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இந்நிலையில் வதோதரா மாவட்டம் டாஹேட் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் தேங்கியிருந்த மழை நீரால் சாலையில் உள்ளத்தை கவனிக்காமல் சென்றுள்ளார்.

இந்நிலையில் பள்ளத்தை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழ நேர்ந்தது ,இதனால் அந்த வழியே வந்த டிராக்டர் ஒன்று அந்த அந்த நபரின் தலையில் ஏறி இறங்கியது.அதிர்ஷ்டவசமாக அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் சில காயங்களுடன் உயிர் தப்பினார் இந்த சம்பவம் நேரில் பார்த்த மக்களை மெய்சிலிர்க்க வைத்தது மட்டுமன்றி சிசிடிவி காட்சிகள் மூலமாகவும் தொடர்ந்து வைரலாகி வருகிறது

Categories

Tech |