Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விவாகரத்து கேட்ட மனைவி…. பேஸ்புக் பழக்கத்தால் நடந்த சம்பவம்…. பல லட்சம் ரூபாய் மோசடி…!!

விவாகரத்து வாங்கி தருவதாக கூறி பெண்ணிடமிருந்து ஒருவர் 13 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மாவட்டத்திலுள்ள சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகர் பகுதியில்  தனியார் கம்பெனி உதவி மேலாளரான லட்சுமிபிரியா என்பவர் மனக்கசப்பின் காரணமாக கணவரை பிரிந்து 8 வயது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த  2 வருடங்களுக்கு முன் மதன்குமார் என்பவர் புழல் ஜெயிலில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறி லட்சுமி பிரியாவுக்கு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில் தன் கணவர் திவாகரிடமிருந்து விவாகரத்து பெற விரும்பிய லட்சுமிபிரியா மதன்குமாரின் உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து வழக்கின் செலவிற்காக பணம் வேண்டும் என கூறி லட்சுமிபிரியாவிடம் இருந்து மதன்குமார் 13 லட்ச ரூபாயை வாங்கியுள்ளார். ஆனால் விவாகரத்து கிடைக்காததால் கோபமடைந்த லட்சுமிபிரியா மதன்குமாரை நேரில் சந்தித்து 13 லட்சத்தை திருப்பிக் கேட்டுள்ளார். அப்போது மதன்குமார் லட்சுமிபிரியாவை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் பயந்துபோன லட்சுமிபிரியா காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் மதன்குமார் புழல் ஜெயிலில் பணியாற்றி வருவதாக கூறியது பொய் என்றும், 13 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததும் உறுதியானது .எனவே காவல்துறையினர் மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |