மாணவ, மாணவிகளுக்காக சூர்யா பேசிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் கூட தனுஷ் என்ற மாணவன் நீட் தேர்வில் பாஸ் ஆகாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதை தொடர்ந்து இதே போன்று பலர் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு வருவதால் பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா மாணவ மாணவிகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என் தம்பி தங்கைகளுக்கு…
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே… pic.twitter.com/jFOK9qxqyN— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2021