14-வது ஐபிஎல் தொடரின் வருகிற 20-ம் தேதி நடைபெற உள்ள ஆட்டத்தில் பெங்களூர் -கொல்கத்தா அணிகள் மோதுகின்றது .
ஐபிஎல் 2021 தொடரின் 2-வது ஆட்டங்கள் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாளை தொடங்க உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது . இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து துபாய் திரும்பிய விராட் கோலி 6 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு ஆர்சிபி அணியில் இணைந்துள்ளார்.
Bold Diaries: Virat Kohli joins the RCB team after quarantine
There were smiles, hugs and laughter in the RCB camp as captain Virat Kohli, Mohammed Siraj and some of our foreign players had their first hit in the nets.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/gxSEVf15rR
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 18, 2021
இவருடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட மற்றொரு ஆர்சிபி அணி வீரரான முகமது சிராஜூம் அணியில் இணைந்துள்ளார் .இதனிடையே நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் தரவரிசையில் ஆர்சிபி அணி 3-வது இடத்தில் உள்ளது. அதோடு வருகின்ற திங்கட்கிழமை கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி நீல நிற ஜெர்சியில் களமிறங்கியுள்ளது.