பயணக்கட்டுப்பாடு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து செயலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் பயணக்கட்டுப்பாடுகள் எளிமையாகப்பட்டுள்ளது குறித்து போக்குவரத்து செயலாளரான கிராண்ட் ஷாப்ஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அக்டோபர் 4 ஆம் தேதி முதல் சிவப்புப் பட்டியலில் இல்லாத நாடுகளில் இருந்து வரும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக இருப்பின்பயணத்திற்கு முன் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டாம். மேலும் அக்டோபர் மாதத்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக PCR பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.
இதற்கு மாற்றாக அவர்கள் விரைவான மற்றும் குறைந்த அளவிலான lateral flow பரிசோதனையை செய்து கொள்ளலாம். அதிலும் செப்டம்பர் 22ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 4 மணி முதல் துருக்கி, பாகிஸ்தான், எகிப்து, இலங்கை ஓமன், வங்கதேசம், மாலத்தீவு மற்றும் கென்யா முதலிய நாடுகள் சிவப்பு பட்டியலில் இருந்து அகற்றப்படுவார்கள். மேலும் இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் இனிமேல் விடுதியில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை.
குறிப்பாக அக்டோபர் 4ஆம் தேதி முதல் உலகளாவிய பயணங்களுக்காக மிகவும் எளிமையான கட்டுப்பாடுகள் அமல்ப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். அதாவது தற்போது இருக்கும் பச்சை,அம்பர், சிவப்பு போன்ற பட்டியலுக்கு மாற்றாக சிவப்பு நிற பட்டியல் மட்டும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து பயணங்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் பயணச்சீட்டு முன்பதிவு அதிகரித்து வருவதாக பயண ஏஜென்சி மையங்கள் தெரிவித்துள்ளன.