கொரோனா தொற்று பரவலினால் Xiamen நகரத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவில் உள்ள Fujian மாகாணத்தில் Xiamen நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனையடுத்து சமீபகாலமாக அந்த நகரத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் அந்நகரம் கொரோனா ஹாட் ஸ்பாட்டாக மாறியுள்ளது. இந்நிலையில் Xiamen நகரத்தில் கொரோனா கட்டுப்பாட்டுகளை சீன நாட்டு அரசு விதித்துள்ளது. அது யாதெனில், அங்கு வசிப்பவர்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. மேலும் அங்குள்ள சுற்றுலா மையங்கள், விளையாட்டு அரங்கங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளது.
குறிப்பாக அனுமதி இல்லாமல் Xiamen குடியிருப்பிற்கு எவரும் செல்லக்கூடாது. இதனைத் தொடர்ந்து Xiamen நகரத்திற்கு அத்தியாவசிய தேவைகளை ஏற்றிச்கொண்டு உள்ளேயும் வெளியேயும் எந்த வண்டிகளும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உணவகங்களில் அமர்ந்து உண்ண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா கட்டுப்பாடுகள் அந்நகரத்தின் இலையுதிர் பண்டிகை நாட்களில் இருந்து தொடங்கவுள்ளதாகவும் விடுமுறை முடியும் வரை அமலில் இருக்கும் என்றும் சீன நாட்டு அரசு கூறியுள்ளது.