Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாத ஏவுதளங்களை பந்தாடிய இந்திய பாதுகாப்புப் படை!

பயங்கரவாத ஏவுதளங்களை இந்திய பாதுகாப்புப் படை தாக்கியதைத் தொடர்ந்து, இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவந்தது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத ஏவுதளங்களின் மீது இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.காஷ்மீர் பள்ளத்தாக்கின் நீலம் பகுதியில் உள்ள நான்கு ஏவுதளங்களை இந்தியா பாதுகாப்புப் படை தாக்கியதில், நான்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

Image result for பயங்கரவாத ஏவுதளங்களை

முன்னதாக, இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படை உதவியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்நாட்டு பாதுகாப்புப் படை அத்துமீறி தாக்கியதில் இந்திய பாதுகாப்புப் படைச் சேர்ந்த இருவர் வீரமரணம் அடைந்தனர். மேலும், அப்பாவி ஒருவர் இந்த தாக்குதலின்போது உயிரிழந்தார்.இந்நிலையில், இந்திய பாதுகாப்படை தாக்கியது குறித்த பதிலளிக்க தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.

Categories

Tech |