Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களால் நடந்ததா….? ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

மர்மநபர்கள் வாலிபரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள காந்தி சாலை மெயின்ரோட்டில் ரத்தவெள்ளத்தில் தலையில் வெட்டுக்காயத்தோடு ஒரு ஆணின் சடலம் கிடப்பதாக திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டனர். அப்போது அந்த வாலிபரின் உடல் மற்றும் தலையில் வெட்டுக் காயங்கள்  இருந்ததால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்திருப்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அதன்பின் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் திருவேங்கடம் பகுதியில் வசித்த ஆட்டோ ஓட்டுனரான சண்முகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் மீது காவல்நிலையத்தில்  பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதோடு சம்பவத்தன்று சண்முகம் தனது தோழர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பேசி கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே சண்முகத்தை அவரது நண்பர்கள் வெட்டி கொலை செய்தனரா? அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேறியதா? என காவல்துறையினர் வழக்குபதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |