Categories
மாநில செய்திகள்

BREAKING : 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்!!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 22ம் தேதி வரை நடைபெறும். செப்.,23ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும்.. 25-ம் தேதி வேட்புமனு திரும்பப் பெறலாம் என்று கூறியுள்ளது.. வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது..

இதற்கிடையே மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தலை கண்காணிப்பதற்காக  பார்வையாளர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

கள்ளக்குறிச்சி – விவேகானந்தன்

வேலூர் – விஜயராஜ் குமார்

ராணிப்பேட்டை – சோ.மதுமதி

திருப்பத்தூர் – சி.காமராஜ்

காஞ்சிபுரம் – வே.அமுதவல்லி

செங்கல்பட்டு – வா. சம்பத்

விழுப்புரம் – டாக்டர் கே.எஸ் பழனிசாமி

நெல்லை– ஜெயகாந்தன்

தென்காசி– பொ.சங்கர்

நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்கள் செப்டம்பர் 22ல், அதாவது வேட்புமனு தாக்கலுக்காண கடைசி நாளில்அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று பணியை தொடங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |