Categories
மாநில செய்திகள்

வாத்தி கம்மிங்! அரசியலில் களமிறங்கும் விஜய்… உள்ளாட்சி தேர்தலில் போட்டி!!

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.. அதன்படி, முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 9ஆம் தேதியும்  நடைபெறும். வாக்கு பதிவு எண்ணிக்கை அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் வரும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தனித்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகள் களம் காண நடிகர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், கொடி மற்றும் தனது படத்தை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது தளபதி விஜய் அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக கருதப்படுகிறது.

Categories

Tech |