Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அரசு 3 நாடுகளை பழிவாங்கும்.. முன்னாள் தூதர் வெளியிட்ட தகவல்..!!

பிரான்ஸ் நாட்டுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர், ஆஸ்திரேலிய நாட்டுடன் நீர்மூழ்கிக்கப்பல் ஒப்பந்தம் செய்ததற்காக பிரிட்டனை பிரான்ஸ் பழிவாங்கும் என்று கூறியிருக்கிறார்.

பிரான்ஸ், பிரெக்ஸிட் விவகாரத்தில் ஏற்கனவே பிரிட்டன் மீது அதிருப்தியில் இருக்கிறது. தற்போது மற்றொரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது, ஆஸ்திரேலிய நாடு, பிரான்ஸ் அரசுடன் நீர்மூழ்கிக்கப்பல் உருவாக்க 90 பில்லியன் டாலர்கள் மதிப்பில் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தது.

ஆனால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துகொள்வதாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஒரு கடிதத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுக்கு அனுப்பியிருக்கிறார். பிரான்ஸ் அரசு, என்ன நடந்தது? என்று புரியாமல், அமெரிக்க அரசை தொடர்புகொண்டுள்ளது.  அதனையடுத்து, சிறிது நேரத்திற்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து, நீர்மூழ்கிக்கப்பல் உருவாக்கும் ஒப்பந்தத்தை அறிவித்துவிட்டார்.

அதாவது, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுடன் சேர்ந்து நீர்மூழ்கி கப்பல் உருவாக்க புதிய ஒப்பந்தத்தை செய்துவிட்டது. இதனால், நீண்ட வருடங்களாக தங்களுடன் நல்ல உறவில் இருந்த அமெரிக்கா  அமெரிக்கா இந்த நடவடிக்கை மேற்கொண்டதை பிரான்ஸ் அரசால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எனவே, பிரான்ஸ் அரசு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளை  பழிவாங்கும் என்று அந்நாட்டு தூதர் கூறியிருக்கிறார்.

Categories

Tech |