Categories
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீங்க…. தைரியம் கொடுங்க…. அமைச்சர் வேண்டுகோள்…!!!

நீட் தேர்வு எழுதியவர்களுக்கான மனநல ஆலோசனை சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் வைத்து நடைபெற்றது. அதில் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் மனநல ஆலோசனை மையத்தில் இருந்து தொலைபேசி வாயிலாக பேசப்பட்டுள்ளது. அதற்காக மட்டும் சென்னையில் 60 மனநல ஆலோசகர்கள் இப்பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மாணவர்களை தொடர்பு கொண்டு பேசுகையில் அவர்களில் ஒரு சிலர் கூறியதாவது “எங்களை டாக்டராக வேண்டும் என்று எங்களுடைய பெற்றோர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்காகத் தான் நாங்கள் இவ்வாறு கஷ்டப்படுகிறோம்” என்று கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து மனநல ஆலோசகர்கள் பெற்றோரிடம் “உங்களது குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுக்காதீர்கள், அவர்களுக்கு மன தைரியத்தை ஏற்படுத்துங்கள்” என்று அறிவுரை  கூறினர். இன்னும் பதினைந்து நாட்களுக்கு முடிய உள்ள இந்த மனநல ஆலோசனையில்  கலந்து கொண்டு பேசிய சிலர் முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர் என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |