நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினய், யோகி பாபு, அர்ச்சனா, தீபா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .
See you in theatres #DoctorFromOct9 😊👍#Doctor pic.twitter.com/FO3tXWvEvy
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 18, 2021
சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில் சில தினங்களுக்கு முன் தியேட்டரில் தான் இந்த படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் டாக்டர் படம் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.