ரஷ்யாவில் 12 வயது சிறுமியை, இளைஞர் கர்ப்பமாக்கி விட்டு தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த Dasha என்ற 12 வயது சிறுமி ஒரு இளைஞரிடம் காதல் வசப்பட்டிருக்கிறார். அவரிடம், தான் 12 வயது சிறுமி என்று கூறினால் தன்னை விட்டு பிரிந்து விடுவார் என்ற பயத்தில் தனக்கு 16 வயது ஆகிறது என்று கூறியிருக்கிறார். எனவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதன்பின்பு, ஒரு நாள் Dasha, தனக்கு 12 வயது தான் ஆகிறது என்று அந்த நபரிடம் உண்மையை கூறிவிட்டார்.
எனினும், அந்த இளைஞன் Dasha -வுடன் உறவு வைத்திருக்கிறார். இதில் Dasha கர்ப்பம் அடைந்துவிட்டார். எனவே, Dasha, தன் காதலன் தன்னையும், குழந்தையையும் நன்றாக கவனித்துக்கொள்வார் என்று நினைத்திருக்கிறார். ஆனால், இதனை அறிந்தவுடன் அந்த இளைஞர் சிறுமியை கைவிட்டுவிட்டு பிரிந்து சென்றார்.
இந்நிலையில், இணையதளங்களில் Dasha மற்றும் அவரின் பெற்றோர் பற்றி பலரும் மோசமாக விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளனர். இதனால், Dasha-வின் தாயான Elena, தன் மகளுடன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து, விமர்சித்தவர்களுக்கு பதிலளிக்க தீர்மானித்துள்ளார். அதன்படி, பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, என் மகளை அந்த நபர் ஏமாற்றிச் சென்றாலும், குழந்தையை நாங்கள் வளர்க்கவுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், Dasha, என் அம்மாவின் உதவியோடு குழந்தையை வளர்த்துக்கொண்டே படித்து, பல் மருத்துவராக வருவேன் என்று கூறியிருக்கிறார். தற்போது காவல்துறையினர் சிறுமியை ஏமாற்றிச்சென்ற நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.