Categories
கிரிக்கெட் விளையாட்டு

களைகட்டும் ஐபிஎல் 2021 : முதல் வெற்றி யாருக்கு ….? சென்னை VS மும்பை நாளை மோதல் ….!!!

2021 ஐபிஎல் சீசன் 2-வது பாதி ஆட்டத்தில்  நாளை நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

14-வது ஐபிஎல் சீசன் கடந்த ஏப்ரல் மாதம் 9-ம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 29 லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் நாளை முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மீதமுள்ள 27 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் சுற்றுகள் என மொத்தம் 31 ஆட்டங்கள் துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது .

இதில் நடந்து முடிந்த  29 ஆட்டங்கள் முடிவில் தரவரிசை பட்டியலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  முதலிடத்திலும், சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும் ஆர்சிபி அணி 3-வது இடத்திலும் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது இடத்திலும் உள்ளது. இதில் நாளை நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Categories

Tech |