கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாளை அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி, மளிகை கடைகள் தவிர மற்ற கடைகள் சந்தைகள் அனைத்தும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் சுற்றுலாத் தலங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் கனன்தீப் சிங் பேடி, தேவை இருந்தால் கோவையை போல சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.