பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பாண்டிச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
PS-1 coming soon! #ManiRatnam #PonniyinSelvan #PS1@LycaProductions @MadrasTalkies_ pic.twitter.com/nIq20rVe9x
— Karthi (@Karthi_Offl) September 18, 2021
சமீபத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி போன்ற நடிகர்கள் இந்த படத்தில் தங்களுடைய பகுதியின் படப்பிடிப்பை நிறைவு செய்தனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் வருகிற 2022-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தின் முதல் பாகம் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.