Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு… “கணவன்- மனைவி அனுசரித்து செல்வது நல்லது”… அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம்..!!

கொடுத்த வேலையை சிறப்பாக நேர்மையாகவும் செய்யக்கூடிய கன்னிராசி அன்பர்களே..!! உங்களுக்கு சிலர் இன்று உதவுவது போல் பாசாங்கு செய்யக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணவரவு இன்றைக்கு தாமதமாக கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள். இன்று குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும் கவனம் இருக்கட்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும், கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகக் கூடும் எச்சரிக்கையாக இருங்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கவனமாக இருப்பது நல்லது.

செலவு கொஞ்சம் அதிகரிக்கும். வீண்  கவலை கொஞ்சம் உண்டாகும். இன்று வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் இன்று கலகலப்பும் இருக்கும். ஒற்றுமையும் இருக்கும். மனம் மகிழ்ச்சியாகவே இன்று நீங்கள் காணப்படுவீர்கள். இன்று வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயமும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்டமான எண் :  1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |