Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு… “தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள்”… குழப்பம் நீங்கி புத்தி தெளிவு ஏற்படும்..!!

காரியத்தை கண்ணும் கருத்துமாக செய்யக்கூடிய துலாம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் பேச்சில் உறுதி நிறைந்திருக்கும். உயர்ந்த செயல்களால் நல்ல மதிப்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் குறுக்கிட்ட இடையூறு விலகி செல்லும். உபரி பண வருமானம் கிடைக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது மட்டும் நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதற்கு கொஞ்சம் தாமதம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலும் வேலைப்பளுவும் சந்திக்க நேரிடும்.

சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி புத்தி தெளிவு ஏற்படும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது நீல நிற ஆடையோ அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையோ  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாகவே இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான  திசை : கிழக்கு

அதிஷ்ட எண் :  1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |