Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி …. வாலிபரின் விபரீத முடிவு …. சோகத்தில் மூழ்கிய குடும்பம் ….!!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த  வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச்  சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் உதயவன் (வயது 26).இவர் அங்குள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்துள்ளார் . இவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார் . இந்நிலையில் சம்பவ தினத்தன்று வலி தாங்க முடியாமல் இவர் எலி மருந்து சாப்பிட்டுள்ளார்.

இதனால் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் .ஆனால்  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .இது குறித்த புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |