செய்யும் வேலையை மிகவும் நேர்த்தியாகவும் துல்லியமாகவும் செய்யக்கூடிய விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று மனதில் நம்பிக்கையை வளர்ப்பது அவசியம்.தொழில் வியாபாரத்தில் உள்ள குறைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக நிபந்தனையுடன் பணம் கடன் பெறக்கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுங்கள். இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இன்று காலகட்டத்தில் எதிர்ப்புகள் உங்களுக்கு விலகி செல்லும். எல்லா வகையிலுமே நன்மையும் உண்டாகும். பணவரவு அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் ஏற்படும். ஏற்கனவே செய்த ஒரு செயலை நினைத்து இன்றைக்கு மனம் வருந்த நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள்.
மனதை கூடுமான வரை நிம்மதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஆலயம் சென்று வாருங்கள். மனம் சிறப்பாகக் காணப்படும். இன்றைய நாள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது அல்லது முக்கியமான காரியத்திற்கு செல்லும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் நீங்கள் விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அணைத்து காரியமும் நல்லபடியாக நடக்கும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் இருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்