தமிழகம் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 606 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் இருக்கின்றன. இதில் 5,134 கிலோமீட்டர் சாலைகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நேரடியாக பராமரித்து வருகிறது. மீதமுள்ளவை மத்திய அரசின் நிதியில் மாநில நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பதற்காக நாற்பத்தி ஒன்பது இடங்களில் சுங்க சாவடிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், எதற்காக சாலை வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை? நான் வைத்திருக்கும் காரின் விலை 21 லட்சம் ரூபாய், ஆனால் இதுவரை 3 லட்சம் மட்டும் சாலை வரி காட்டியுள்ளேன். ஒரு தேசிய நெடுஞ்சாலை அமைக்க எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது? அங்கு எத்தனை ஆண்டுகள் சுங்கச்சாவடிகளில் பணம் வசூலிக்கப்படும்? என்பது தொடர்பான எந்த விபரமும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
ஒரு ஐந்து வருடம் மட்டும் என்னிடம் ஆட்சியை கொடுத்துப் பாருங்கள். தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தையும் ஒரே இரவில் ஜேசிபி கொண்டு இடித்து விடுவேன். இது என் மாநிலம் சாலையை நான் பராமரித்து கொள்கிறேன் என்று சொல்வதற்கு இங்கு ஆள் கிடையாது. இதுதான் இங்கு பிரச்சினை என்று தெரிவித்துள்ளார்.