தனது கண் பார்வையால் அனைவரையும் கவரக்கூடிய தனுசு ராசி அன்பர்களே..!! பலநாள் தாமதமான பணி ஒன்று இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனையில் அனுகூலம் ஒரு சேர கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் முன்னேற்றம் ஏற்படும். மாமன், மைத்துனருக்கு உதவிகள் செய்வீர்கள். இன்று நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் காரியத்தடை தாமதம் ஏற்படக்கூடும். உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படும். ஆகையால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனமாக இருங்கள். வீண்பயம் அவ்வப்போது வந்து செல்லும். ஏற்கனவே நீங்கள் செய்த காரியங்களுக்கான பலனை இன்று நீங்கள் அடையக்கூடும். சிலர் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். அதிலும் கவனம் இருக்கட்டும். வீண் வழக்கு விவகாரங்கள் வரக்கூடும்.
ஆகையால் எச்சரிக்கையாக செயல்படுங்கள். உரிமையை மட்டும் விட்டுவிடாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும். அதுபோலவே முக்கியமான பணியாக இருந்தாலும், முக்கியமான காரியமாக இருந்தாலும் வெள்ளை நிறத்தில் ஆடையை அணிந்து செல்லுங்கள். இல்லையெனில் வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்