Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கெட்டுபோன பிரியாணி விற்பனை… அதிகாரிகள் அதிரடி சோதனை… 28 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ்…!!

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்களில் நடத்திய சோதனையில் கெட்டுபோன பிரியாணி, கோழி இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் செந்தில்குமார் தமிழத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும் சைவ, அசைவ உணவுகளை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செந்தில் ராஜ்குமார், தர்மர், ஜெயராஜ், லிங்கவேல் வீரமுத்து முத்துசாமி ஆகியோர் அனைத்து உணவகங்களிலும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 100க்கும் மேற்பட்ட உணவகங்களில் நடத்திய சோதனையில் 28 உணவகங்களில் கெட்டுபோன பிரியாணி, நாள்பட்ட பொறித்த இறைச்சி ஆகியவை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதில் 12 கிலோ கெட்டுபோன பிரியாணி மற்றும் 3 நாட்களுக்கு மேலான 40 கிலோ பொறித்த கோழி இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அந்த உணவகங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்துள்ளனர்.

Categories

Tech |