இலங்கையில் பரவிவரும் டெல்டா வகை கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஓன்று இலங்கை. அங்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 98 ஆயிரம் பேர் ஆகும். மேலும் கொரோனா வைரஸால் சுமார் 11 ஆயிரத்து 817 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து டெல்டா வகை கொரோனா வைரஸானது இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கானது வருகின்ற 21 ஆம் தேதி அன்று முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு குழுக் கூட்டமானது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் டெல்டா வகை கொரானா வைரஸானது அதிவேகமாக பரவி வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகின்ற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி வரை நீட்டிகப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.