Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : காயத்திலிருந்து மீண்ட ‘யாக்கர் நாயகன் நடராஜன்’…. தீவிர வலைப்பயிற்சி ….!!!

காயத்திலிருந்து குணமடைந்தத தமிழக வீரர் நடராஜன் தற்போது ஹைதராபாத் அணியில் இணைந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் .

ஐபிஎல் 2021 சீசன் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால்  போட்டிபாதியில்  நிறுத்தப்பட்டது .இந்நிலையில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை முதல் தொடங்குகிறது .இதில் நாள் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன .இந்த நிலையில் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் நடராஜன் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது சக வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் இவர் இந்தியாவில் நடந்த நடப்பு சீசன் போட்டியின்போது காயம் காரணமாக பாதியில் விலகினார். அதன் பிறகு இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிக்கு எதிரான தொடரிலும்  இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்தார் . தற்போது காயத்திலிருந்து குணமடைந்தத நடராஜன் ஹைதராபாத் அணியில் இணைந்து உள்ளது அணிக்கு கூடுதல் பலத்தை வழங்கியுள்ளது.

Categories

Tech |