பொதுவாக, பேட்டிங்கில் டெய்லெண்டர்ஸ்கள் களமிறங்கியவுடனே அதிரடியான பேட்டிங்கில் ஈடுபட்டால், பலருக்கும் ஆச்சரியமாகதான் இருக்கும். பந்தை வீசுவதில் செலுத்தும் வேகம் சில சமயங்களில் அவர்களது பேட்டிங்கிலும் பிரதிபலிக்கும்.
அந்தவகையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், 10 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் அவர் ஓடி எடுத்த ரன் ஒன்றுதான். மற்ற 30 ரன்களையும் அவர் ஐந்து சிக்சர்கள் மூலம்தான் எடுத்தார்.
குறிப்பாக, ஜடேஜா அவுட்டான பிறகுதான் களமிறங்கிய உமேஷ் யாதவ், தான் சந்தித்த முதலிரண்டு பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டார். தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் ஜார்ஜ் லின்டே வீசிய 114ஆவது ஓவரின் ஐந்தாவது பந்தை மிட் விக்கெட் திசையிலும், பின் அதே ஓவரின் கடைசி பந்தை லாங் ஆன் திசையிலும் சிக்சர் அடித்தார்.
India declare on 497/9
Umesh Yadav gave them an extraordinary late burst, smashing five sixes in 10 balls 💥
How can South Africa respond?#INDvSA 📝👇https://t.co/AEYe6hGC3o pic.twitter.com/Qk7Aa4YOqC
— ICC (@ICC) October 20, 2019
இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய முதலிரண்டு பந்துகளிலும் சிக்சர் அடித்த மூன்றாவது வீரர் என்ற சாதனைப் படைத்தார். அதேசமயம், இந்திய ஜாம்பவான் வீரர் சச்சினுக்குப் பிறகு இச்சாதனைப் படைத்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
டெஸ்ட் போட்டிகளில் எதிர்கொண்ட முதலிரண்டு பந்துகளையும் சிக்சர் அடித்த வீரர்கள்:
- ஃபாஃபி வில்லியம்ஸ் (வெஸ்ட் இண்டீஸ் ) v இங்கிலாந்து, 1948
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) v ஆஸ்திரேலியா, 2013
- உமேஷ் யாதவ் (இந்தியா) v தென் ஆப்பிரிக்கா, 2019
உமேஷ் யாதவின் இந்த வெறித்தனமான பேட்டிங்கைக் கண்ட நெட்டிசன்கள், அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…! என கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
https://twitter.com/imdesignerr/status/1185894830712377344