புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் சீருடையுடன் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்:பஞ்சமி இட விவகாரத்தில் ஸ்டாலின் ஏன் இதுவரையில் அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிடாமல், பட்டாவை மட்டும் வெளியிட்டார். இதன் மூலம் திமுகவின் சொத்துக்கள் அனைத்தும், பஞ்சமி நிலங்களை அபகரித்து வாங்கப்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஸ்டாலின் முதலில் மூல பத்திரத்தைக் காட்டட்டும் அப்புறம் ராமதாஸின் கேள்விக்குப் பதில் கூறட்டும்.
தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு தேசத்துரோகி. தமிழ்நாடு அரசு அவரை உடனடியாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்காகச் சீமான் இதுவரை என்ன செய்துவிட்டார். சீமானைப் போன்ற தீய சக்திகள், பிரிவினைவாதிகள் சமுதாயத்தில் நடமாட அருகதை இல்லாதவர்கள்.
தமிழ்ச் சமுதாயத்தின் எதிரி சீமான். தமிழ் மக்களைத் திசை திருப்புவதற்காக, தற்போது சீமான் இதுபோன்ற கருத்துக்களைப் பேசிவருகிறார் என்று கூறிய ராஜா, நாளை நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக படுதோல்வி அடைந்து, அதன் சகாப்தம் ஒரு முடிவுக்கு வரப்போகிறது என்று பொறிக்கிளம்ப பேசியுள்ளார் ஹெச்.ராஜா.