வெடி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்து வந்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு தயாரிப்பின் போது வெடிவிபத்து ஏற்பட்டு தொழிலாளியான சண்முக ராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இந்த விபத்தில் 8 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் படுகாயமடைந்த மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது தொழிலாளிமயான முத்துராஜ் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.