சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து முதல் நபராக ரோபா சங்கரின் மகள் வெளியேற்றம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழில் பிரம்மாண்டமாக துவக்கப்பட்ட நிகழ்ச்சி சர்வைவர். இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார். இதனையடுத்து நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் அனைவரும் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சி முழுவதும் அங்கு தான் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிக் பாக்ஸ் நிகழ்ச்சியை போன்று இதிலும் சில விதிமுறைகள் உள்ளன.
மேலும் இந்த நிகழ்ச்சியானது கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி பிரம்மாண்டமாக துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான சுற்றுகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. அதிலும் மற்ற போட்டிகளை போல இதிலும் வெளியேற்றம் உள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து முதல் நபராக இந்திரஜா சங்கர் வெளியேறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.