பிரித்தானியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரஷ்யா சமையல் எரிவாயுவின் விலைகளில் மாற்றம் செய்துள்ளது.
பிரித்தானியாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் ரஷ்யா சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தியுள்ளது. அதனால் இன்னும் இரண்டு வார காலத்தில் பிரித்தானியாவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான சூழல் உருவாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சமையல் எரிவாயுவின் விலை உயர்வு விவகாரம் தொடர்பாக Gazprom நிறுவனத்தின் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அமைச்சர்கள் குழுவும் சிக்கலை சமாளிக்க உணவு உற்பத்தியாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் உணவு உற்பத்திக்கான கார்பன்-டை-ஆக்சைடு பற்றாக்குறையால் இரண்டு உர ஆலைகள் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரிசோதனை கட்டாயமாக எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் ஏற்கனவே சாரதிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணாமாக உணவுப்பொருட்கள் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அதன்பின் அசைவ உணவு தொழிற்கூடங்களும் தற்போது கார்பன்-டை-ஆக்சைடை பற்றாக்குறை தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகாலமாக ஐரோப்பாவில் உயர்ந்துள்ள எரிவாயுவின் விலை அந்நாட்டின் மின்சார செலவுகளை பல வருட உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
மேலும் இங்கிலாந்தில் மின்சார விலை இயல்பை விட 11 மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ரஷ்யாவின் Gazprom நிறுவனத்தின் மீது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வுக்கு ரஷ்யா காரணமாக இருக்கலாம் எனவும் பிரித்தானியாவின் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். இருப்பினும் Gazprom நிறுவனம் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை தான் தாங்கள் நிவர்த்தி செய்து வருவதாக Gazprom நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.