சீனாவில் இருந்து புறப்பட ஏர்பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸுக்கு ஏர்பிரான்ஸ் விமானம் நேற்று புறப்பட்டது. இதனை அடுத்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்டுள்ளது. மேலும் வெடி விபத்தின் காரணமாக கரும்புகை விமானத்தை சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை பீஜிங் விமான நிலையத்திற்கு அவசர அவசரமாக தரை இறக்கினார்.
இந்த விபத்தினால் பயணிகளுக்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. குறிப்பாக விமானத்தின் பின் பகுதியில் வெடிச்சத்தம் நிகழ்ந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விமானத்தின் இருக்கைகள் சேதமடைந்து இருப்பதை அதில் பயணித்த பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் ஏர்பிரான்ஸ் விமானத்தில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து சீன அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.