தனுசு ராசி அன்பர்களே.! வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.
இன்று நூதன பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாக இருக்கும். உத்யோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். கலைத் துறையில் சாதிக்க கூடிய வாய்ப்புகளும் சிறப்பாக இருக்கின்றது. வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். ஏளனமாக உங்களைப் பார்த்தவர்களை இப்பொழுது தலைகுனியச் செய்யும் போது உங்களுடைய திறமையை அவர்கள் புரிந்து கொள்வார்கள். கவனமாக இருக்க வேண்டும். பயணங்களின்போது பொருட்களை பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். எந்த ஒரு வேலையையும் கவனமாக செய்வது நல்லது. எல்லாவிதமான சிறப்பும் இருக்கும். சிறப்பான முன்னேற்றம் இருக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வாழ்க்கை வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும்.
இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கும். நம்பிக்கையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். பெண்கள் இன்று சுறுசுறுப்பாக இயங்க முடியும். காதல் கொஞ்சம் கசக்கும். காதலின் நிலைபாடுகள் சரியான புரிதல் இல்லாமல் இருக்கும். காதலை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் காதல் உங்களுக்கு எண்ணற்ற மாற்றத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். சிறப்பான சூழல் இருக்கும். விட்டுக் கொடுத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5 அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்