Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க கடிதம் இருந்துச்சு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வளையாத்தூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவியும், சந்தோஷ் மற்றும் கோகுல் என 2 மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் சந்தோஷ் கோவை தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். பின் இளைய மகன் கோகுல் பிளஸ் 2 படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரின் கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நகை திருடப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக விஜயகுமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். இதனால் மனமுடைந்த கோகுல் மற்றும் விசாலாட்சி ஆகிய 2 பேரும் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். அப்போது அருகில் இருந்தவர்கள் விசாலாட்சியை மீட்டுள்ளனர். ஆனால் மகன் கோகுலை காப்பாற்ற முடியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து மகனுடைய இறுதிச்சடங்கை முடித்த விஜயகுமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து விஜயகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் எழுதி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |