Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

நான் வர மாட்டேன்…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள துறை பெரும்பாக்கம் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தினால் கோமதி கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக அவரின் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மனைவியை தன்னுடன் வாழ வருமாறு செல்போன் மூலம் பாஸ்கர் அழைத்துள்ளார்.

ஆனால் கோமதி வருவதற்கு மறுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பாஸ்கர் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |