Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அங்க ஏதோ பேசிட்டு இருக்காங்க…. வசமாக சிக்கிய நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஏ.டி.எம்மில் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டிய கும்பலைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் காவல்துறையினர் ரயில் நிலையம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவிலின் பின்புறமாக சந்தேகப்படும் படி 8 நபர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அதன்பின் காவல்துறையினர் வருவதைக் கண்டவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்த போது இரண்டு பேர் தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் தேஜேஸ்வரன், பிரகாஷ், கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் அப்பகுதியில் இருக்கும் ஏ.டி.எம்மில் பணம் கொள்ளையடிப்பதற்காக சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்த கத்தி, கடப்பாரை மற்றும் இரும்பு கம்பிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 3 பேரையும் கைது செய்து தப்பி சென்ற மற்ற நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |