Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“அண்ணனிடம் தகராறு செய்யாதே”…. ஆட்டோ ஓட்டுனருக்கு நடந்த விபரீதம்…. தென்காசியில் பரபரப்பு…!!

ஆட்டோ ஓட்டுநரை வக்கீல் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில்  உள்ள அழகப்பபுரம் பகுதியில் ராமகிருஷ்ணன் வசித்து வந்துள்ளார்.இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். அதே பகுதியில் காவல் துறையில் பணியாற்றி வரும் சுரேஷ் குமார் என்பவர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு வக்கீலான சதீஷ்குமார் என்ற சகோதரர் உள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் தனது வீட்டுவாயிலில் நின்று கொண்டிருந்தபோது சதீஷ்குமார் தீடிரென தகராறு செய்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ராமகிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராமகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து   வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் ராமகிருஷ்ணன் சுரேஷ்குமாரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததும், அதனால் சதீஷ்குமார் அவரை பலமுறை கண்டித்ததும் தெரியவந்துள்ளது.

மேலும் சம்பவத்தன்று சதீஷ்குமார் ராமகிருஷ்ணனை கண்டித்து பேசுகையில் ஏற்பட்ட தாக்குதலில் ராமகிருஷ்ணன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் ராமகிருஷ்ணனின் உறவினர்கள் அவரது சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பிறகு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |