புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை தினம் அன்று கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் சனிக்கிழமை தினத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கோவில் வளாகத்தில் லட்சுமி நரசிம்மர் சிலை வைக்கப்பட்டு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக வழிபாடு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உற்சவர் லட்சுமி நரசிம்மருக்கு தயிர், நெய், இளநீர், பால் என 12 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இந்த பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கோவிலில் பொதுமக்கள் சாமியை தரிசனம் செய்ய கூட்டம் கூட்டமாக வந்துள்ளனர். மேலும் கொரோனா காரணத்தினால் பக்தர்கள் யாரும் கோயிலின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.